கூட்டுறவு நிர்வாகத்தில் திட்டமிடுதல் PDF
Document Details
Uploaded by BrighterTranscendental
Tags
Related
- Análisis Financiero PDF - Curso de Capacitación en Gestión de Cooperativas - GERCOOP
- Unit 5: Management and Working of Major Cooperative Organizations PDF
- Unit 5: Management and Working of Major Cooperative Organizations and Institutions PDF
- Unit 5: Management and Working of Major Cooperative Organizations and Institutions PDF
- Cooperative Management Module PDF
- Midterm Reviewer PDF
Summary
இந்த ஆவணமானது கூட்டுறவு நிறுவனங்களில் திட்டமிடுதல் குறித்த ஒரு விரிவான விளக்கத்தை வழங்குகிறது. திட்டமிடல் நிலைகள், முதலீடு திட்டம், நடைமுறை பாகுபாடு மற்றும் செயல்முறைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை விவரிக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தில் திட்டமிடுதலில் உள்ள பிரச்சினைகளும் நிறைவாக விளக்கப்படுகின்றன.
Full Transcript
# கூட்டுறவு நிர்வாகத்தில் திட்டமிடுதல் ## 6. முறை ஒரு நிறுவனத்தில் தனிப்பட்ட பணியாளரின் செயல்முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று விளக்கிக் கூறுவதே முறை எனப்படும். இவற்றின் அடிப்படையில் தான் நிறுவனத்தின் மேலாளர் தனிப்பட்ட பணியாளரின் திறமையை வளர்க்க முடிகிறது. ## 7. நடைமுறை திறம் தொழில் நிறுவனங...
# கூட்டுறவு நிர்வாகத்தில் திட்டமிடுதல் ## 6. முறை ஒரு நிறுவனத்தில் தனிப்பட்ட பணியாளரின் செயல்முறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று விளக்கிக் கூறுவதே முறை எனப்படும். இவற்றின் அடிப்படையில் தான் நிறுவனத்தின் மேலாளர் தனிப்பட்ட பணியாளரின் திறமையை வளர்க்க முடிகிறது. ## 7. நடைமுறை திறம் தொழில் நிறுவனங்கள் ஒரே நிலையில் இயங்குபவை அல்ல. எதிர்பாராமல் மாற்றங்கள் ஏற்படலாம். அம்மாற்றங்களை மேலாளர் உரிய முறையில் தவிர்க்க வேண்டும். எனவே நடைமுறை திறம் என்பது நிறுவனத்தில் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்கும் ஒரு நடவடிக்கை எனக் கூறலாம். ## (xi) கூட்டுறவில் திட்டமிடுதலின் நிலைகள் அல்லது படிகள் ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் கொள்கைகளும் நோக்கங்களும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டவை. கூட்டுறவு நிறுவனங்கள் துணை விதிகளின் படி நடைபெறக்கூடியவை. நோக்கங்களுக்காகவும், கொள்கைகளுக்காகவும் பாடுபடக்கூடியவை. எனவே இதன் எல்லைகள் வரையறைக்குட்பட்டு தங்களது செயல் திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் கூட்டுறவுச் சங்கங்களில் தம் விருப்பம்போல் நோக்கங்களையும், திட்டங்களையும் மாற்றிக் கொள்ள முடியாது. ### 1. குறிக்கோள் திட்டம் ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும், அடுத்து வரும் ஆண்டில் நிறைவேற்றப்போகும் பணிகளை முன்னதாகவே தீர்மானித்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உற்பத்தி, விற்பனை பொது மக்களின் விருப்பம் போன்ற விஷயங்கள் சம்பந்தமாக தகவல்களையும், புள்ளி விவரங்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் குறிக்கோள்களை நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ற படி வரவு செலவு திட்டங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாநில, மத்தியச் சங்கங்களும், பிரதம சங்கங்களின் குறிக்கோள்களையும் குறியீட்டளவையும் நிர்ணயிப்பதுண்டு. ### 2. முதலீடு திட்டம் ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாதார வசதிகள் பொறுப்புகள் முதலியவற்றை ஆராய்ந்து அச்சங்கத்தின் மேலாளர்களோ அல்லது நிர்வாகிகள் அடுத்தாண்டிற்கான முதலீட்டுத் தேவைகளை திட்டமிடமுடியும். நிதியுதவியும் வங்கிகளிடமும் அரசாங்கத்திடமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் இதர வழிகளிலும் பெறக்கூடிய நிதி வசதிகளை கருத்திற்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு திட்டமிடுவதன் மூலம் எடுத்துக் கொண்ட பணிகள் தாமதமின்றி நடைபெறும். ### 3. நடைமுறை பாகுபாடு மற்றும் செயல்முறைத் திட்டம் கூட்டுறவுகளில் நிர்வாகக் குழு குறிக்கோள்களை நிறைவேற்றும் போது திட்டப் பணிகளில் பல்வேறு பாகுபாடு செய்யலாம். பாகுபாடு செய்து பணிகளை சங்கப் பணியாளர்களிடையே பிரித்து ஒப்படைக்கலாம். சங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள மேலாளர், பணியாளர்கள், உறுப்பினர்கள் அனைவரின் பணியை நிர்ணயித்து கண்காணித்து வரும் பொறுப்பு நிர்வாகக் குழுவிற்கு உண்டு, சங்கத்தின் முழு குறிக்கோள்களையும் கண்காணித்து நிர்வகித்து வரும் பொறுப்பினை மத்திய வங்கியும், மாநில அரசாங்கமும் ஏற்றுக் கொள்கின்றன. ### 4. சூழ்நிலைத் திட்டம் ஒரு சங்கம் மேலே கண்ட பல பணிகளையும் நிறைவேற்றுவதற்கு வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மாவட்ட மாநில அளவில் சங்கங்களின் பணி சிறப்படைவதற்கானச் சூழ்நிலைகளை மாநில அரசாங்கமும் மத்திய வங்கிகளும் உருவாக்க இயலும். சங்கத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு மகாசபையிடமும், நிர்வாகக் குழுவிடமும் உள்ளது. ### 5. உடனடித் திட்டம் உடனடியாக பலனளிக்கும் திட்டங்களை ஒரு சங்கத்தில் உருவாக்கி நிறைவேற்றுவது மேலாளர் அல்லது நிர்வாகக் குழுவேயாகும். சங்கத்தின் அன்றாட உற்பத்தி, வியாபாரம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், ஊதிய விவரங்கள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தில் அடங்கும். இவற்றிற்கேற்ப சங்கத்தின் ஓராண்டிற்கான வரவு, செலவு திட்டத்தை நிர்வாகக்குழு தயாரித்து மகாசபையின் ஒப்புதலுக்கு வைக்கிறது. ### 6. நீண்ட காலத் திட்டம் சங்கத்தின் முன்னேற்றத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை தீர்மானிப்பது சங்கத்தின் மகா சபையே ஆகும். சங்கம் மற்றொரு சங்கத்தோடு இணைவது அல்லது இரண்டாகப் பிரிவது போன்ற நடவடிக்கைகளையே மகா சபை தீர்மானிக்கிறது. சங்கம் தனது பொறுப்புகளை மாற்றம் செய்ய வேண்டுமானாலும், நோக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமானாலும் துணை விதி திருத்தம் செய்ய வேண்டுமானாலும் அதனை மகா சபையே தீர்மானித்து பதிவாளர் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். இவ்வழிகளிலே கூட்டுறவுச் சங்கங்களில் திட்டமிடும் பணிகள் நடைபெறுகின்றன. ## (xii) திட்டத்தை உருவாக்கும் பொறுப்புடையவர்கள் - மேலாளர் - நிர்வாகக் குழு - பிரதம கூட்டுறவுச் சங்கங்கள் - மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் - மாநில கூட்டுறவுச் சங்கங்கள் - மாநில அரசு - மத்திய அரசு - இந்திய ரிசர்வ் வங்கி ## (xiii) கூட்டுறவில் திட்டமிடுதலில் உள்ள பிரச்சினைகள் - சிறிய அமைப்பு - ஊதியம் பெறாத நிர்வாகிகள் தலையீடு - உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பில்லாமை - கூட்டுறவுச் சட்டங்களையும், விதிகளையும், துணை விதிகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் முழுவதும் அறியாத மேலாளர் மற்றும் நிர்வாகிகள், - அரசாங்க தலையீடு - ரிசர்வ் வங்கியின் தலையீடு - தொழில் மேலாண்மையில் தேர்ச்சியில்லாமை ## அமைத்தல் ### (i) பொருள் : ஒரு நிறுவனத்தில் பலதரப்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள். அங்கு அவர்களால் பல வகைப்பட்ட பணிகள் நிறைவேற்றப்படும். இந்த பலவகைப் பணியாளர்களையும் அவர்களது பணிகளையும் முரண்பாடு இல்லாமல் பொருத்தமாக இணைப்பதே அமைத்தலாகும். ### (ii) வரைவிலக்கணம் "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கூட்டு நடவடிக்கைகளே அமைத்தலாகும்". - செஸ்டர் ஜ.பெர்னார்டு. “பணியாளர்களை ஒருங்கிணைத்து நிறுவனத்தின் நோக்கங்களை திறமையோடு நிறைவேற்ற பணிகளை தகுதிகண்டு தரம்பிரித்து ஒதுக்குதல், பொறுப்பு மற்றும் அதிகாரங்களை நிர்ணயித்தல், மற்றும் நிறுவன நிர்வாகப் பணிப் பிரிவுகளை ஏற்படுத்துதல் ஆகியப் பணிகளை விளக்குவதே அமைத்தலாகும்". - திரு. எல்.ஏ.ஆலன். ### (iii) நோக்கங்கள்: - நிறுவனத்தின் வளங்களை அதிக அளவில் பயன்படுத்துதல். - மேலாண்மை பணிகளை சிறப்பாகச் செயல்படுத்துவது. - நிறுவனத்தை வளர்ச்சியடைய செய்வது மற்றும் விரிவாக்கம் செய்வது. - நிறுவனத்தின் இலக்குகளை அடைய வைப்பது. - பணியாளர்களை முறையாக உபசரிக்க செய்தல். ### (iv) அமைத்தலின் பயன்கள்: - பணியாளர்கள் தங்களது பணியில் சிறப்புத்துவம் பெறுகிறார்கள். - செயல்பாடுகளை வேகமாக செயல்படுத்த பயன்படுகிறது. - செயல்பாடுகளில் தெளிவு. ### (v) அமைத்தலின் பணிகள்: - நிறுவன நிர்வாகப் பணிப் பிரிவுகளை பிரித்தல். - தகுதிகண்டு பணிகளைத் தரம் பிரித்தல். - அதிகாரம் பொறுப்பு ஆகியவற்றை நிர்ணயித்து பிரித்து வழங்குதல் #### (1) நிறுவன நிர்வாகப் பணிப் பிரிவுகளை பிரித்தல் முதலில் நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகள் நன்கு பரிசீலிக்கப்படும் அதன் பின் அந்த நடவடிக்கைகள் யாவும் இலாக்கா என்றும் பகுதியென்றும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அதற்கேற்றபடி நிர்வாக அதிகாரிகளும் பணியாளர்களும் அமைக்கப்படுவர். பணிப் பிரிவுகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம் 1. பூகோள ரீதியில் பிரித்தல் 2. கலை ரீதியில்) நிர்வாகப்பணிப் பிரிவுகளை பிரிக்கலாம். அதாவது சென்னை, பம்பாய், கல்கத்தா, டெல்லி என பல நகரங்களில் (பூகோள