Summary

This is a Tamil textbook for 6th standard, covering terms 1 content. It provides learning objectives, and information about the Tamil language and culture. It is published by the Tamil Nadu Textbook and Educational Services Corporation.

Full Transcript

www.tntextbooks.in தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு முதல் பருவம் த ொகுதி 1...

www.tntextbooks.in தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு முதல் பருவம் த ொகுதி 1 தமிழ் ENGLISH தமிழ்நாடு அரசு விலையில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது பள்ளிக் கல்வித்துறை தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும் 6th Std Tamil Term I FM.indd 1 17-12-2021 15:23:56 www.tntextbooks.in தமிழ்நாடு அரசு முதல்பதிப்பு - 2018 திருத்திய பதிப்பு - 2019, 2020, 2022 (புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட நூல்) விற்பனைக்கு அன்று பாடநூல் உருவாக்கமும் த ொகுப்பும் ா ம ஆர ப ய ல க வன மா. ெ 6  ச  0 ை ன 600 0 - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் © SCERT 2018 நூல் அச்சாக்கம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் www.textbooksonline.tn.nic.in II 6th Std Tamil Term I FM.indd 2 17-12-2021 15:23:56 www.tntextbooks.in முகவுரை குழந்தைகளின் உலகம் வண்ணமயமானது! விந்ைதகள் பல நிைறந்தது! அவர்களின் கற்பனைத்திறன் கானுயிர்களையும் நட்புடன் நடைபயில வைத்திடும். புதியன விரும்பும் அவர்தம் உற்சாக உள்ளம் அஃறிணைப் ப ொருள்களையும் அழகுதமிழ் பேசிடச் செய்திடும். அப்புதிய உலகில் குழந்தைகள ோடு பயணம் செய்வது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்க் குழந்தைகளின் பிஞ்சுக்கரங்கள் பற்றி, புதிய பாடநூல்களின் துணைக ொண்டு கீழ்க்கண்ட ந ோக்கங்களை அடைந்திடப் பெருமுயற்சி செய்துள்ளோம். கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றிப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல். தமிழர்தம் த ொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுதல். தன்னம்பிக்கையுடன் அறிவியல் த ொழில்நுட்பம் கைக்கொண்டு மாணவர்கள் நவீன உலகில் வெற்றிநடை பயில்வதை உறுதிசெய்தல். அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல் அறிவுச் சாளரமாய்ப் புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டுதல். புதுமையான வடிவமைப்பு, ஆழமான ப ொருள் மற்றும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த அணுகுமுறை எனப் புதுமைகள் பல தாங்கி உங்களுடைய கரங்களில் இப்புதிய பாடநூல் தவழும்பொழுது, பெருமிதம் ததும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் நுழைவீர்கள் என்று உறுதியாக நம்புகிற ோம். III 6th Std Tamil Term I FM.indd 3 17-12-2021 15:23:56 www.tntextbooks.in நாட் டு ப்பண் ஜன கண மன அதிநாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல பங்கா விந்திய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ சுப நாமே ஜாகே தவ சுப ஆசிஸ மாகே காஹே தவ ஜய காதா ஜன கண மங்கள தாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ஜய ஜய ஜய ஜய ஹே! - மகாகவி இரவீந்திரநாத தாகூர். நாட்டுப்பண் - ப ொருள் இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒடிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் த ொடர்களில் எதிர ொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி! IV 6th Std Tamil Term I FM.indd 4 17-12-2021 15:23:57 www.tntextbooks.in தமி ழ ்த்தாய் வாழ்த் து நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில ொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைப ோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! - ‘மன ோன்மணீயம்’ பெ. சுந்தரனார். தமிழ்த்தாய் வாழ்த்து - ப ொருள் ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், ப ொருத்தமான பிறை ப ோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைப ோல, அனைத்துலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும்படி (புகழ் பெற்று) இருக்கின்ற பெருமைமிக்க தமிழ்ப் பெண்ணே! தமிழ்ப் பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவ ோமே! வாழ்த்துவ ோமே! வாழ்த்துவ ோமே! V 6th Std Tamil Term I FM.indd 5 17-12-2021 15:23:57 www.tntextbooks.in தேசிய ஒருமைப்பாட்டு உறுதிம ொழி ‘நாட்டின் உரிமை வாழ்வையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வலுப்படுத்தச் செயற்படுவேன்’ என்று உளமார நான் உறுதி கூறுகிறேன். ‘ஒருப ோதும் வன்முறையை நாடேன் என்றும் சமயம், ம ொழி, வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும் பூசல்களுக்கும் ஏனைய அரசியல் ப ொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும் அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன்’ என்றும் நான் மேலும் உறுதியளிக்கிறேன். உறுதிம ொழி இந்தியா எனது நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபுச் சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன்; எல்லாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். VI 6th Std Tamil Term I FM.indd 6 17-12-2021 15:23:58 www.tntextbooks.in உலகின் மூத்த ம ொழியாம் தமிழின் பல்வேறு பரிமாணங்களை இன்றைய இளம்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு துணைக்கருவியாக இப்பாடநூல். ஒவ்வொரு இயலையும் ஆர்வத்துடன் அணுக ப ொருண்மைக்கு ஏற்ப உரைநடைஉலகம், இயலின் த ொடக்கத்தில் கவிதைப்பேழை, விரிவானம், கற்றல் ந ோக்கங்கள் கற்கண்டு ஆகிய தலைப்புகளாக..... பாடப்பகுதிகளின் கருத்தை விளக்க அரிய, புதிய செய்திகளை அறிந்து க ொள்ள தெரிந்து தெளிவ ோம்.... காலத்தின் பாய்ச்சலுக்கு ஈடுக ொடுப்பதாக ஆளுமை மிக்க இணையவழி உரலிகள்... ஆசிரியர்களுக்கும் ஆற்றல் நிறை மாணவர்களுக்கும்... பயின்ற பாடங்கள் குறித்துச் சிந்திக்க, கற்றல் இயலின் இறுதியில் செயல்பாடுகளாகக் விழுமியப் பக்கமாக கற்பவை கற்றபின்.... நிற்க அதற்குத் தக... மாணவர்தம் அடைவை அளவிட உயர்சிந்தனைத் திறன்பெற, மதிப்பீடு.... படைப்பாக்கத்தின்வழி இலக்கியச்சுவை உணர்ந்து வாழ்வைத் தன்னம்பிக்கையுடன் நுட்பங்களை உள்வாங்கி எதிர்கொள்ள, படித்துச்சுவைக்க, ம ொழியை ஆற்றலுடன் ம ொழிவிளையாட்டு.... பயன்படுத்த ம ொழியை ஆள்வோம்.... ம ொழிப்பாடத்தை மட்டுமல்லாமல் பிறபாடங்களைப் பயில, கருத்துகளைப் புரிந்து எதிர்வினையாற்ற உதவும் ஏணியாய்….. புதிய வடிவம், ப ொலிவான உள்ளடக்கத்துடன் இப்பாடநூல் உங்கள் கைகளில்… VII VII 6th Std Tamil Term I FM.indd 7 17-12-2021 15:23:59 www.tntextbooks.in ப ொருளடக்கம் பக்க வ.எண் ப ொருண்மை/இயல் பாடத்தலைப்புகள் மாதம் எண் 1 ம ொழி இன்பத்தமிழ் * 2 தமிழ்க்கும்மி 5 தமிழ்த்தேன் வளர்தமிழ் 8 ஜூன் கனவு பலித்தது 15 தமிழ் எழுத்துகளின் வகையும் த ொகையும் 18 2 இயற்கை சிலப்பதிகாரம் * 26 காணி நிலம் * 29 இயற்கை இன்பம் சிறகின் ஓசை 32 கிழவனும் கடலும் 37 ஜூலை முதலெழுத்தும் சார்பெழுத்தும் 43 திருக்குறள் * 48 3 அறிவியல், த ொழில்நுட்பம் அறிவியல் ஆத்திசூடி 52 அறிவியலால் ஆள்வோம் 55 எந்திர உலகம் கணியனின் நண்பன் 58 ஆகஸ்டு ஒளி பிறந்தது 64 ம ொழிமுதல், இறுதி எழுத்துகள் 69 ( * ) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி மின் நூல் மதிப்பீடு VIII 6th Std Tamil Term I FM.indd 8 17-12-2021 15:23:59 www.tntextbooks.in இயல் ஒன்று தமிழ்த்தேன் கற்றல் ந ோக்கங்கள் Ø செய்யுளின் ப ொருளைச் ச ொந்த நடையில் கூறுதல் - எழுதுதல் Ø தமிழ் ம ொழியின் இனிமையை உணர்ந்து ப ோற்றுதல் Ø தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளைப் பட்டியலிடுதல் Ø தன்னம்பிக்கையுடன் தனக்கான இலக்குகளை உருவாக்குதல் Ø எழுத்துகளின் வகை, த ொகைகளை அறிதல் 1 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 1 16-12-2021 19:46:34 www.tntextbooks.in கவிதைப்பேழை இயல் ஒன்று இன்பத்தமிழ் ந ம து த ா ய ் ம ொ ழி ய ா கி ய த மி ழ ை த் த மி ழ் இலக்கியங்கள் ப ோற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் ப ோற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் க ொஞ்சுவதும் உண்டு. அதுப ோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம். தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! * தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் த ோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! - பாரதிதாசன் ச ொல்லும் ப ொருளும் நிருமித்த - உருவாக்கிய விளைவு - வளர்ச்சி சமூகம் - மக்கள் குழு அசதி - ச ோர்வு 2 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 2 16-12-2021 19:46:34 www.tntextbooks.in பாடலின் ப ொருள் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. த மி ழு க் கு நி ல வு எ ன் று பெ ய ர். இ ன ்பத்த மி ழ் எ ங ்க ள் ச மூ க வ ள ர் ச் சி க் கு அடிப்படையான நீர் ப ோன்றது. தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் ப ோன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் ப ோன்ற கருவியாகும். தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் ப ோன்றது. இன்பத்தமிழ் எங்கள் ச ோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் ப ோன்றது. தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை க ொடுக்கும் த ோள் ப ோன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் ப ோன்ற உறுதி மிக்க வாள் ஆகும். நூல் வெளி பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது க ொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் க ொண்டார். தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், ப ொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுப ொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று ப ோற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக. 2. தமிழை அமுது, நிலவு, மணம் என்று பெயரிட்டு அழைப்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. 3. தமிழுக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயர்களைப் பட்டியலிடுக. 4. தமிழ்க் கவிதைகள், பாடல்களைப் படித்து மகிழ்க. (எ.கா.) தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் அமிழ்தே நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்  - காசி ஆனந்தன் 3 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 3 16-12-2021 19:46:36 www.tntextbooks.in மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும் அ) சமூகம் ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும் அ) மகிழ்ச்சி ஆ) க ோபம் இ) வருத்தம் ஈ) அசதி 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல் --------- அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று 4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல் --------- அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள்   ஈ) தமிழ்எங்கள் 5. ’அமுதென்று’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று   இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று 6. 'செம்பயிர்’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர் இன்பத்தமிழ் - பாடலின் கருத்துக்கு ஏற்றபடி ப ொருத்துக. 1. விளைவுக்கு - பால் 2. அறிவுக்கு - வேல் 3. இளமைக்கு - நீர் 4. புலவர்க்கு - த ோள் ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) ச ொற்களை எடுத்து எழுதுக. (எ.கா.) பேர் - நேர் குறுவினா 1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை? 2. நீங்கள் தமிழை எதன ோடு ஒப்பிடுவீர்கள்? சிறுவினா 1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக. 2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள த ொடர்பு யாது? சிந்தனை வினா வே ல் எ ன ்ப து ஓ ர் ஆ யு த ம். த மி ழ் ஏ ன் வே லு டன் ஒ ப் பி டப்ப டு கி ற து ? 4 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 4 16-12-2021 19:46:36 www.tntextbooks.in கவிதைப்பேழை இயல் ஒன்று தமிழ்க்கும்மி கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் ப ோற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசைய ோடு பாடலாம்; கும்மி க ொட்டி ஆடலாம். க ொட்டுங்கடி கும்மி க ொட்டுங்கடி இளங் க ோதையரே கும்மி க ொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி க ொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல க ொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! ப ொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ்வழி காட்டிருக்கும் ! - பெருஞ்சித்திரனார் ச ொல்லும் ப ொருளும் ஆழிப் பெருக்கு - கடல் க ோள் ஊழி – நீண்டத ொரு காலப்பகுதி மேதினி - உலகம் உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை 5 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 5 16-12-2021 19:46:36 www.tntextbooks.in பாடலின் ப ொருள் இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக் க ொட்டிக் கும்மியடிப்போம். பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் க ொண்ட ம ொழி. பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் ம ொழி. தமிழ், ப ொய்யை அகற்றும் ம ொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் ம ொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த ம ொழி; உயிர் ப ோன்ற உண்மையை ஊட்டும் ம ொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் ம ொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் ம ொழி தமிழ்மொழி. நூல் வெளி பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, க ொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் மு த ல ா ன நூ ல்கள ை இ ய ற் றி யு ள்ளா ர். தென ் ம ொ ழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் த ொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் க ொண்டது. கற்பவை கற்றபின் 1. தமிழ்க்கும்மி பாடலை இசைய ோடு பாடி மகிழ்க. 2. பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க. வான்தோன்றி வளி த ோன்றி நெருப்புத் த ோன்றி மண் த ோன்றி மழை த ோன்றி மலைகள் த ோன்றி ஊன் த ோன்றி உயிர் த ோன்றி உணர்வு த ோன்றி ஒளி த ோன்றி ஒலி த ோன்றி வாழ்ந்த அந்நாள் தேன் த ோன்றியது ப ோல மக்கள் நாவில் செந்தமிழே! நீ த ோன்றி வளர்ந்தாய்! வாழி! - வாணிதாசன் 6 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 6 16-12-2021 19:46:36 www.tntextbooks.in மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தாய் ம ொழியில் படித்தால் ------ அடையலாம் அ) பன்மை   ஆ) மேன்மை   இ) ப ொறுமை   ஈ) சிறுமை 2. தகவல் த ொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது அ) மேதினி   ஆ) நிலா   இ) வானம்   ஈ) காற்று 3. ’செந்தமிழ்’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______ அ) செந் + தமிழ்   ஆ) செம் + தமிழ்   இ) சென்மை + தமிழ்   ஈ) செம்மை + தமிழ் 4. ’ப ொய்யகற்றும்’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) ப ொய் + அகற்றும்   ஆ) ப ொய் + கற்றும் இ) ப ொய்ய + கற்றும்   ஈ) ப ொய் + யகற்றும் 5. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல் --------- அ) பாட்டிருக்கும்   ஆ) பாட்டுருக்கும்   இ) பாடிருக்கும்   ஈ) பாடியிருக்கும் 6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல் --------- அ) எட்டுத்திசை   ஆ) எட்டிதிசை   இ) எட்டுதிசை   ஈ) எட்டிஇசை நயம் உணர்ந்து எழுதுக. 1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுப ோல் வரும் (ம ோனை) ச ொற்களை எடுத்து எழுதுக. 2. பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுப ோல் வரும் (எதுகை) ச ொற்களை எடுத்து எழுதுக. 3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுப ோல் வரும் (இயைபு) ச ொற்களை எடுத்து எழுதுக. குறுவினா 1. தமிழ் ம ொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை? 2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்? சிறுவினா 1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் ம ொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன? 2. தமிழ்க் கும்மி பாடலின்வழி நீங்கள் அறிந்துக ொண்டவற்றை உம் ச ொந்த நடையில் எழுதுக. சிந்தனை வினா தமிழ் ம ொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்? 7 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 7 16-12-2021 19:46:36 www.tntextbooks.in உரைநடை உலகம் இயல் ஒன்று வளர்தமிழ் மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகளை அறியலாம் வாருங்கள். மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று ம ொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது ம ொழி. ம ொழி, நாம் சிந்திக்க உதவுகிறது; சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் ம ொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ம ொழிகள் உள்ளன. இவற்றுள் சில ம ொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன. உலக ம ொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் ம ொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க ம ொழி என ஏற்றுக் க ொள்ளப்பட்டவை சில ம ொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும். தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, ச ொல் இனிமை, ப ொருள் இனிமை க ொண்டவை. பல ம ொழிகள் கற்ற கவிஞர் பாரதியார், யாமறிந்த ம ொழிகளிலே தமிழ்மொழி ப ோல் இனிதாவது எங்கும் காண ோம் என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார். மூத்தம ொழி என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று பாரதத்தாயின் த ொன்மையைப் பற்றிப் ப ா ர தி ய ா ர் கூ றி ய க ரு த் து த மி ழ்த்தாய் க் கு ம் ப ொருந்துவதாக உள்ளது. சாலைகள் த ோன்றிய பிறகே சாலை விதிகள் த ோன்றியிருக்கும். அதுப ோல இலக்கியம் த ோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் த ோன்றியிருக்க வேண் டு ம். த ொல்கா ப் பி ய ம் த மி ழி ல் ந ம க் கு க் 8 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 8 16-12-2021 19:46:37 www.tntextbooks.in கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இதனைக் க ொண்டு தமிழ் மிகவும் த ொன்மையான ம ொழி என்பதை உணரலாம். எளிய ம ொழி தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த ம ொழி. உ யி ரு ம் மெய் யு ம் இ ணை வ த ா ல் த ோன் று பவை உ யி ர ் மெய் எ ழு த் து க ள். உ யி ர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து க ொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும். (எ.கா.) அ + மு + து = அமுது. தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன. (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய, ழ தெரிந்து தெளிவோம் ச ொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள் தமிழென் கிளவியும் அதன ோ ரற்றே- தமிழ் த ொல்காப்பியம் த ொல் : 386 சிலப்பதிகாரம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய தமிழ்நாடு வஞ்சிக்காண்டம் இதுநீ கருதினை ஆயின் - வஞ்சி : 165 தமிழன் அப்பர் தேவாரம்... தமிழன் கண்டாய் - திருத்தாண்டகம் : 23 சீர்மை ம ொழி சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் ச ொல். தமிழ் ம ொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் ச ொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது. உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவ ோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர். பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் ம ொழி. 9 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 9 16-12-2021 19:46:38 www.tntextbooks.in வளமை ம ொழி த மி ழ் வ ளமை மி க ்க ம ொ ழி. மலர் முகை த ொல்கா ப் பி ய ம் , ந ன் னூ ல் உ ள் ளி ட ்ட ம ொட்டு அலர் இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ் ம ொழி. ம ொட்டு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் க ொண்டது; திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் வீ நிறைந்தது; சிலப்பதிகாரம், மணிமேகலை அரும்பு மு த லி ய க ா ப் பி ய ங ்க ள ை க் க ொ ண ்ட து. செம்மல் இ வ ்வா று இ ல க் கி ய , இ ல க ்க ண வ ள ம் நிறைந்தது தமிழ் ம ொழி. தமிழ் ம ொழி ச ொல்வளம் மிக்கது. ஒரு ப ொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் ம ொழியின் சிறப்பாகும். ச ா ன ்றாக , பூ வி ன் ஏ ழு நி லைக ளு க் கு ம் த ோன் று வ து மு த ல் உ தி ர்வ து வ ரை தனித்தனிப் பெயர்கள்தமிழில் உண்டு. ஓர் எழுத்தே ஒரு ச ொல்லாகிப் ப ொருள்தருவதும் உண்டு. ஒரு ச ொல் பல ப ொருளைக் குறித்து வருவதும் உண்டு. சான்றாக ‘மா’ – என்னும் ஒரு ச ொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு ப ோன்ற பல ப ொருள்களைத் தருகிறது. வளர்மொழி த மி ழு க் கு மு த்த மி ழ் எ ன் னு ம் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் தெரிந்து தெளிவோம் எ ண ்ணத்தை வெ ளி ப்ப டு த் து ம் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; தாவர இலைப் பெயர்கள் நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் ஆல், அரசு, மா, பலா, வாழை இலை நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும். அகத்தி, பசலை, முருங்கை கீரை த மி ழி ல் க ா ல ந ் த ோ று ம் பல வ கை ய ா ன இ ல க் கி ய வ டி வ ங ்க ள் அருகு, க ோரை புல் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. நெல், வரகு தாள் செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா மல்லி தழை ப ோன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். சப்பாத்திக் கள்ளி, தாழை மடல் கட்டுரை, புதினம், சிறுகதை ப ோன்றன கரும்பு, நாணல் த ோகை உரைநடை வடிவங்கள். த ற்போ து அ றி வி ய ல் த மி ழ் , பனை, தென்னை ஓலை கணினித்தமிழ் என்று மேலும் மேலும் கமுகு (பாக்கு) கூந்தல் வளர்ந்து க ொண்டே வருகிறது. 10 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 10 16-12-2021 19:46:39 www.tntextbooks.in புதுமை ம ொழி இன்றைய அறிவியல், த ொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன. இ ணை ய ம் , மு க நூ ல் , பு ல ன ம் , கு ர ல்தேட ல் , தே டு ப ொ றி , செ ய லி , த ொ டு தி ரை மு த லி ய ச ொற ்க ள ை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமூக ஊடகங்களான செய்தித்தாள், வ ா ன ொ லி , த ொலைக்காட் சி ஆ கி ய வ ற் றி லு ம் ப ய ன ்படத்தக ்க ம ொழியாக விளங்குகிறது தமிழ்மொழி. அறிவியல் த ொழில்நுட்ப ம ொழி உலகில் எழுத்து வடிவம் பெறாத ம ொழிகள் பல உள்ளன. இந்நிலையில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் த ொழில்நுட்ப ந ோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன. ம ொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். த ொல்காப்பியம், நன்னூல் ப ோன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி ம ொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன. தமிழ் எண்களை அறிேவாம். 1 2 3 4 5 6 7 8 9 10 ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௧௦ மூத்த ம ொழியான தமிழ் - கணினி, இணையம் ப ோன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது ம ொழியாகவும் திகழ்கிறது. இ த்த கு சி ற ப் பு மி க ்க ம ொ ழி யை க் கற்ப து ந ம க் கு ப் பெ ரு மை ய ல்ல வ ா ? த மி ழ் ம ொ ழி யி ன் வ ளமை க் கு ம் வளர்ச்சிக்கும் பங்காற்றவேண்டியது நமது கடமையல்லவா? 11 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 11 16-12-2021 19:46:58 www.tntextbooks.in இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள். வ.எண் ச ொல் இடம்பெற்ற நூல் 1. வேளாண்மை கலித்தொகை 101, திருக்குறள் 81 2. உழவர் நற்றிணை 4 3. பாம்பு குறுந்தொகை-239 4. வெள்ளம் பதிற்றுப்பத்து-15 5. முதலை குறுந்தொகை-324 6. க ோடை அகநானூறு-42 7. உலகம் த ொல்காப்பியம், கிளவியாக்கம்- 56 திருமுருகாற்றுப்படை-1 8. மருந்து அகநானூறு-147, திருக்குறள் 952 9. ஊர் த ொல்காப்பியம், அகத்திணையியல் -41 10. அன்பு த ொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84 11. உயிர் த ொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955 12. மகிழ்ச்சி த ொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531 13. மீன் குறுந்தொகை 54 14. புகழ் த ொல்காப்பியம், வேற்றுமையியல் 71 15. அரசு திருக்குறள் 554 16. செய் குறுந்தொகை 72 17. செல் த ொல்காப்பியம், 75 புறத்திணையியல் 18. பார் பெரும்பாணாற்றுப்படை, 435 19. ஒழி த ொல்காப்பியம், கிளவியாக்கம் 48 20. முடி த ொல்காப்பியம், வினையியல் 206 12 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 12 16-12-2021 19:46:58 www.tntextbooks.in கற்பவை கற்றபின் 1. மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக் க ொள்ளும் ம ொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக. 2. தமிழ் பேசத்தெரியாத குடும்பத்தினர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தர விரும்பும் பத்துத் தமிழ்ச் ச ொற்களைப் பட்டியலிடுக. 3. வாழ்த்துகளைத் தமிழில் கூறுவ ோம் (எ.கா.) பிறந்தநாள் வாழ்த்து நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ வேண்டும்! அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் ச ொல்லி வாழ்த்துகிற ோம்! பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!  - அறிவுமதி மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘த ொன்மை’ என்னும் ச ொல்லின் ப ொருள்__________ அ) புதுமை  ஆ) பழமை  இ) பெருமை  ஈ) சீர்மை 2. ‘இடப்புறம்’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) இடன் + புறம் ஆ) இைட + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம் 3. ‘சீரிளமை’ என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) சிறு + இளமை  ஆ) சீர்மை + இளமை  இ) சீரி + இளமை  ஈ) சீற் + இளமை 13 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 13 16-12-2021 19:46:58 www.tntextbooks.in 4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல்________ அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம் 5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் ச ொல் ________ அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ் 6. “தமிழ்மொழி ப ோல் இனிதாவது எங்கும் காண ோம்” என்று பாடியவர் ________ அ) கண்ணதாசன்  ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்  ஈ) வாணிதாசன் 7. 'மா' என்னும் ச ொல்லின் ப ொருள்________ அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா க ோடிட்ட இடத்தை நிரப்புக. 1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது................................................. 2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்............................... 3. ம ொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது.............................. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். ச ொற்களைச் ச ொந்தத் த ொடரில் அமைத்து எழுதுக. 1. தனிச்சிறப்பு.................................................................................................................... 2. நாள்தோறும்.................................................................................................................... குறுவினா 1. தமிழ் ஏன் மூத்தம ொழி என்று அழைக்கப்படுகிறது? 2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக. சிறுவினா 1. அஃறிணை, பாகற்காய் ஆகிய ச ொற்களின் ப ொருள் சிறப்பு யாது? 2. தமிழ் இனிய ம ொழி என்பதற்கான காரணம் தருக. 3. தமிழ் ம ொழியின் சிறப்ைபக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக. சிந்தனை வினா 1. தமிழ் ம ொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது? 2. தமிழ் ம ொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக. 14 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 14 16-12-2021 19:46:59 www.tntextbooks.in விரிவானம் இயல் கனவு பலித்தது ஒன்று கடிதம் தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு; இவைமட்டுமல்ல அறிவியலும் உண்டு. தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இ ல க் கி ய ங ்க ள் வ ா யி ல ா க வெ ளி யி ட் டி ரு க் கி ற ா ர ்க ள் நம் முன்னோர்கள். இலக்கியங்கள் கூறும் செய்திகளை அறிவ ோமா! இடம் : மதுரை நாள் : 12-05-2017 அன்புள்ள அத்தைக்கு, வணக்கம். நான் நலம். நீங்கள் நலமா? என் பள்ளிப்பருவக் கனவு நனவாகி விட்டது. ஆம் அத்தை. இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களைத்தான் நினைத்துக் க ொள்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்தப ோது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேனே! நினைவிருக்கிறதா? அதன்பிறகு நீங்கள் எனக்குத் த ொடர்ந்து பல கடிதங்கள் எழுதினீர்கள். செய்திகள் பலவற்றைக் கூறி ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தீர்கள். என் ஐயங்கள் எல்லாவற்றையும் தீர்த்துவைத்தீர்கள். என் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை உங்களின் கடிதங்களே! அக்கடிதங்களை அறிவுக் கருவூலங்களாக இன்றும் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய உயர்வுக்குக் காரணமான அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. 15 6th Std Tamil Term 1 Pages 1-24.indd 15 16-12-2021 19:48:26 www.tntextbooks.in இடம்: சென்னை நாள்: 04-03-2006 அன்புள்ள இன்சுவை, இங்கு நான் நலமாக இருக்கிறேன். உன் கடிதம் கிடைத்தது. ஆறாம் வகுப்பிலேயே உன் எதிர்கால இ ல க் கி னை நீ உ ரு வ ா க் கி க் க ொண் டு வி ட ்டாய். மகிழ்ச்சி! தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே! சாதனைக்கு ம ொழி ஒரு தடையே இல்லை. நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகள ோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை உன்னுடன் பகிர நினைக்கிறேன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. த ொல்காப்பியர் தமது த ொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார். கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் ப ொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்ைலப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. திரவப் ப ொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் நாழி முகவாது நால் நாழி கலந்த மயக்கம் உலகம் ஆதலின். என ஔ வை ய ா ர் ப ா ட லி ல் - த ொல்காப்பியம் கூறப்பட்டுள்ளது. ப ோர்க்களத்தில் மார்பில் புண்படுவது கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…. இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற - கார்நாற்பது ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு. நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை - பதிற்றுப்பத்து என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை ம ரு த் து வ த் து க்கா ன இ ன்ைற ய கூ று க ள் க ோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய வியப்பளிக்கின்றன அல்லவா? நரம்பின் முடிமுதிர் பரதவர் த ொலை வி ல் உ ள்ள ப ொ ரு ளி ன் - நற்றிணை உருவத்தை அருகில் த ோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலிய ோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவ?

Use Quizgecko on...
Browser
Browser